Friday, July 1, 2011

ஆயுதங்களற்ற புரட்சி கூட சாத்தியமாகலாம், ஆனால் புத்தகங்களற்ற புரட்சி சாத்தியமில்லை

உலக நாடகமேதை வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறந்த தினமான (சிலர் நினைவு தினம் என்றும் கூறுகிறார்கள்) ஏப்ரல் 23 - உலக புத்தக தினமாக கொண்டாட படுகிறது. சிலர் ஸ்பெயின் நாட்டின் எழுத்தாளர் செர்வாண்டிஸ் என்பவரது பிறந்த தினம் என்றும் சொல்கிறார்கள்.
நல்லவேலை, நல்லசம்பளம் என்ற குறிக்கோளுடன் மட்டுமே பள்ளிகூட பாடபுத்தகங்கள் உருவாக்கப்படுகின்றன. முழுமையான, சமுக அக்கறையுள்ள மனிதனை உருவாக்குபவையாக பாடபுத்தகங்களுக்கு வெளியே உள்ள புத்தகங்களே நமக்கு உதவுகின்றன.
புத்தகங்களை பற்றி சில பழமொழிகளும், சில தலைவர்களின் கருத்துக்களும்
அடுத்த தலைமுறைக்கு பரிசாக ஏதுவும் தரவிரும்பினால் புத்தகங்களை கொடுங்கள் - சீனப்பழமொழி
வாசித்ததால் வாழ்ந்தேன் - நெல்சன் மண்டேலா
உன் மனைவிக்கு ஒரு முழம் பூ வேண்டாம் புத்தகம் வாசிக்க கொடு - பெரியார்
வேறு எங்கோ ஒரு அற்புத உலகில் வசிக்க விரும்புவோருக்காக கண்டுபிடிக்கப்பட்டது புத்தகம் மட்டுமே - மார்க் ட்வெய்ன்
புத்தகங்கள் இருந்தால் போதும் சிறைக்கம்பிகளும், கொட்டடிகளும் ஒருவரை அடைத்து வைக்க முடியாது - பகத்சிங்
புத்தகங்கள் பயங்கமான போராட்ட ஆயுதங்கள் - மார்டினா லூதர் கிங்
மனிதனின் ஆகப்பெரிய கண்டுபிடிப்பு புத்தகங்கள் - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
நல்ல புத்தம் வாசித்து முடிக்கப்படுவதே இல்லை - ஆர்.டி. கம்மிஸ்
காலக்கடலில் நமக்கு வழிகாட்ட அமைத்தப்பட்ட கலங்கரை விளக்கு புத்தகம் - எட்வின் .பி. விப்பின்
புதிய புத்தகத்தை வாசிக்கும் போது புதிய நண்பனை சந்திக்கிறோம், அதை மீண்டும் வாசிக்கும் போது நீண்டகால நண்பனை சந்திக்கிறோம் - சீனப்பழமொழி
எப்பொதும் நல்ல புத்தகங்களை படியுங்கள், அதைப்பாதி படித்துக்கொண்டிருக்கும் போது ஒருவேளை நீங்கள் இறந்து போனாலும், அப்போதும் இனிமையான முகம் கொண்டு இருப்பீர்கள் - ஓ.ருர்கே
திரும்பத் திரும்ப திறந்து பார்த்துக் கொள்ளும் பரிசாக புத்தகங்கள் இருக்கும் - கேரிசன் கெயிலர்
எனவே திருமணங்கள், பிறந்தநாள் பரிசாக புத்தகங்களை கொடுங்கள்.குழந்தைகளுக்கு புத்தக வாசிப்புபழகத்தை ஏற்படுத்துங்கள். ஏன் என்றால் ஆயுதங்களற்ற புரட்சிகூட சாத்தியமாகலாம், ஆனால் புத்தகங்களற்ற புரட்சி சாத்தியமில்லை.

No comments:

Post a Comment