Sunday, March 18, 2012

நிலவின் மீது நாசா ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது பற்றி?

நிலவின் மீது கடந்த சில நாட்களுக்கு முன் ராக்கெட்டை மோதச் செய்த நாசா விஞ்ஞானிகள், அதன் தாக்கத்தால் உருவான பள்ளத்தில் ஆய்வுக் கலத்தை செலுத்தி தண்ணீர் இருக்கிறதா என ஆய்வு செய்துள்ளனர். இதன் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

நவகிரகங்களில் ஒன்றான சந்திரனின் (நிலவு) மீது செயற்கையான ஒரு தாக்குதலை நாசா நடத்தியுள்ளதாக ஒரு சில ஜோதிடர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நாசாவின் ஆய்வு காரணமாக சந்திரனின் இயல்புநிலை மாறுமா? இதனால் பூமியில் உள்ள மனிதர்களுக்கு ஜோதிட ரீதியாக ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

பதில்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குருவின் மீது சூமேக்கர் (Shoemaker) என்ற விண்கல் மோதியது. அதன் காரணமாக குரு கிரகத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. அந்த தருணத்தில் பல பைனான்ஸ் கம்பெனிகள் மூடப்பட்டது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

குரு கிரகத்தின் மீது சூமேக்கர் மோதியது இயற்கையான நிகழ்வு என்றாலும் அதன் தாக்கம் மிகக் கடுமையாக இருந்தது.

நாசா தற்போது நிலவின் மீது மோதச் செய்த ராக்கெட், சூமேக்கர் விண்கல்லை விட பன்மடங்கு சிறியது. அதனால், அந்த ராக்கெட் ஏற்படுத்தும் தாக்கமும் மிகக் குறைவானதே.

எனவே, நாசாவின் இந்த செயற்கைத் தாக்குதல் காரணமாக சந்திரனின் இயல்பு நிலை மாறி விடாது. எனினும், ஜோதிட ரீதியாக சந்திரன் மனோகாரகன் என்பதால் உலகில் உள்ள ஜீவராசிகளின் மனநிலை சிறியளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்களில் மனிதன் விரைவில் குடிபெயர்வதற்கான சாத்தியங்கள் உள்ளது. ஜோதிட ரீதியாக சந்திரன் ஜல கிரகம் என்றே அழைக்கப்படுகிறது. அங்கு ஏராளமான அளவில் தண்ணீர் இருப்பது உண்மை.

தற்போது நிலவில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் அதன் ஒரு பகுதியில் மட்டுமே நடத்தப்படுகின்றன. இதனால் நிலவில் தண்ணீர் இல்லை என்று ஒரு தரப்பினரும், தண்ணீர் உண்டு என்று மற்றொரு தரப்பினரும் வாதிடுகின்றனர். எனினும் நிலவில் தண்ணீர் இருப்பது விரைவில் உறுதி செய்யப்படும்

நாசா 2025ல் வெளியிடவிருக்கும் அதிநவீன விமானங்கள்

அமெரிக்காவின் டெய்லி மெயில் பத்திரிகையில் வெளியான தகவலின்படி. நாசா தற்போதுள்ள விமானத்தின் வேகத்திலும் பார்க்க 85% மேலும் அதிவேகமாக செல்லக்கூடிய விமானங்களை 2025ம் ஆண்டுகளில் வெளியிடவிருக்கின்றது. இவ் விமானங்களிற்கான மாதிரி படங்களே இவை.





2040 இல் பூமியை எரிகல் தாக்குவதற்கான சாத்தியம்: நாசா விஞ்ஞானிகள் தகவல்


2040 பெப்பிரவரி 05 இல் பூமியை, பிரமாண்டமான எரிகல் தாக்குவதற்கு வாய்ப்புள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
2011AG5 என பெயரிடப்பட்டுள்ள இவ் எரிகோள் சுமார் 9 மைல்கல் விஸ்தீரணமுடையதாகும். இவ் எரிகோள் பூமியில் விழுமாயின், பல மில்லியன் கணக்கான உயிர்களை இழக்கவேண்டி ஏற்படுமென தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் பூமிக்கு அருகில் உள்ள பொருட்கள் தொடர்பான குழுவானது, இவ் எரிகல்லின் பிரயாணப் பாதையை மாற்றுவது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாசா செயற்கைக்கோள் 'கிரெயில்' நிலவின் சுற்றுப் பாதையில் இணைந்தது

 

 

கிரெயில்-ஏ எனப்படும் இச்செயற்கைக்கோள் நேற்று சனிக்கிழமை அன்று நலவைச் சுற்றியுள்ள நீள்வட்டப் பாதையில் இணைந்தது. கிரெயில்-பி எனப்படும் மற்றை செயற்கைக் கோள் இன்று ஞாயிற்றுக்கிழமை நிலவின் சுற்றுப்பாதையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செயற்கைக்கோள்கள் நிலவின் உட்புறத்தை மிகத் துல்லியமாக அளவிடும் எனவும், இதன் மூலம் சிறப்பான முடிவுகளை வானியலாளர்கள் பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது. நிலவின் தோற்றம், மற்றும் நிலவின் கிட்ட, மற்றும் தூரப் பகுதிகள் ஏன் வேறுபட்டுக் காணப்படுகின்றன போன்றவற்றுக்கு விடை அறியப்படலாம் என வானியலாளர்கள் நம்புகின்றனர். நிலவின் மேற்பரப்புகளில் உள்ள சிறிய ஈர்ப்பு மாற்றங்களை கிரெயில் செயற்கைக்கோள் அளவிடும். இந்த இரட்டைச் செயற்கைக் கோள்கள் 2011 செப்டம்பர் 10 ஆம் நாள் புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது.

நாசா புகைப்படங்கள்











பூமியைப் போன்ற கிரகம் கண்டுபிடிப்பு: நாசா உறுதிப்படுத்தியது

நட்சத்திரமொன்றிலிருந்து உயிரினங்கள் வாழக்கூடிய வலயத்திலுள்ள, பூமி போன்ற கிரகமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா இன்று தெரிவித்துள்ளது.

கெப்ளர் விண்வெளித் தொலைக்காட்டி மூலம் கண்டுபிடிக்கப்பிடிக்கப்பட்ட இந்த கிரகத்திற்கு கெப்ளர் 22-பி (Kepler 22-b) என பெயரிடப்பட்டுள்ளது.

எமது சூரியனைப் போல் அல்லாத நட்சத்திரமொன்றை கெப்ளர் 22-பி கிரகம் சுற்றி வருகிறது. ஒரு தடவை அதன் சொந்தச் சூரியனை சுற்றுவதற்கு 290 நாட்கள் செல்கிறது.

நட்சத்திரங்களின் அளவு, வெப்பநிலை முதலான விடயங்களை கருத்திற்கொண்டு அந்த நட்சத்திரத்திலிருந்து எவ்வளவு தூர எல்லையில் உயிரினங்கள் இருக்கக்கூடிய கிரகங்கள் காணப்படலாம் என்பது தீர்மானிக்கப்படுகிறது. இத்தகைய பிரதேசமானது உயிரினங்கள் 'வசிக்கத்தக்க வலயம்'  (habitable zone) என அழைக்கப்படுகிறது.

இதன்படி  எமது சூரிய தொகுதிக்கு அப்பால் 'வசிக்கத்தக்க வலயத்திற்குள்' கண்டுபிடிக்கப்பட்ட முதல் கிரகம் கெப்ளர் 22- பி ஆகும்.

600 ஒளி ஆண்டுகள் தூரத்திலுள்ள இந்த கிரகம் பூமியைவிட 2.4 மடங்கு பெரிதானதாகும். ஆதன் வெப்பநிலை சுமார் 22 பாகை செல்சியஸ் ஆகும்.

இவ்வருட ஆரம்பத்தில் பிரெஞ்சு விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் உயிர் வாழத் தேவையான அம்சங்களைக் கொண்டிருக்கக்கூடிய கிரகமொன்றை கண்டறிந்ததாக அறிவித்தனர். எனினும் நாசாவினால் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட இத்தகைய முதல் கிரகம்  கெப்ளர் 22- பி என்பது குறிப்பிடத்தக்கது.

பூமிக்கு கிடைப்பதைவிட 25 சதவீதம் சூரியஒளி குறைவாகவே அதற்கு கிடைப்பதால்  மென்மையான வெப்பநிலை நிலவுகிறது. இது திரவ நிலையில் தண்ணீர் காணப்படுவதற்கான வாய்ப்பை வழங்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

2005 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு ஏவப்பட்ட கெப்ளர் தொலைக்காட்டி சுமார் 155,000 நட்சத்திரங்களை அவதானித்து வருகிறது. இதுவரை இத்தொலைக்காட்டி மூலம் கிரகங்கள் என்ற அங்கீகாரம் பெறத்தக்கவை எனக் கருதப்படும் 2326 விண்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 207 கிரகங்கள் பூமி அளவிலானவையாகும்.